சென்னை: அமலாக்க இயக்குனரகம் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை ஒத்திவைக்கக் கோரி செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஒத்திவைக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனுவை நிராகரித்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது ஜூலை 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.