கடந்த மாதம் இந்தியாவில் Realme Buds Air 6 அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, தற்போது நிறுவனம் Realme GT 6 உடன் Realme Buds Air 6 Proவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்டுகள் 50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), 40 மணி நேர பேட்டரி, இரண்டு டிரைவர்கள், 360-degree டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ, இரண்டு சாதனங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான வசதி மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
Realme Buds Air 6 Pro இயர்பட்டின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து விளக்கமாக இப்பொழுது பார்க்கலாம். Realme Buds Air 6 Pro இந்திய வாடிக்கையாளர்களுக்கு 4,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த பிராண்ட் 500 ரூபாய் மற்றும் 300 ரூபாய் வங்கி டிஸ்கவுண்டுகளை வழங்குகிறது.
இந்த இயர்பட்டுகள் ஜூன் 27 முதல் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்குவதற்கு கிடைக்கிறது. Realme Buds Air 6 Pro டைட்டானியம் ட்விலைட் மற்றும் சில்வர் ப்ளூ கலர் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Realme Buds Air 6 Pro அம்சங்கள் பேக்ரவுண்டில் கேட்கும் தேவையில்லாத சத்தங்களை வடிகட்டும் விதமாக Realme Buds Air 6 Pro இயர்பட்டில் 50dB ANC மற்றும் 4000Hz அல்ட்ரா வைடு பேண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்டுள்ளது. மேலும் தெளிவான போன் கால் அனுபவத்தை பெறுவதற்காக இதில் 6- மைக்ரோ போன்கள் மற்றும் என்வைரன்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) பொருத்தப்பட்டுள்ளது.இதில் 6mm மற்றும் 11mm வூஃபர் ஆகிய இரண்டு டிரைவர்கள் உள்ளன.
மேலும் தடையில்லாத கேமிங் அனுபவத்தை கொடுப்பதற்காக LDAC ஆடியோ கோடெக் மற்றும் 55ms சூப்பர் லோ லேட்டன்சி உள்ளது. அனைத்து திசைகளில் இருந்தும் சத்தங்களை தெளிவாக பெறுவதற்கு Buds Air 6 Pro இல் 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரியல்மீ இயர்பட்டுகள் 40 மணி நேர பேட்டரி ஆதரவுடன் IP55 தண்ணீர் மற்றும் தூசு எதிர்ப்பு விகிதத்தை கொண்டுள்ளன.
இந்தியாவில் Realme Buds Air 6 Pro 5,000 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், OPPO Enco Air3 Pro அதே விலைக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயர்பட்டுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் 4,999 ரூபாய் விலைக்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. Oppo-ன் இந்த இயர்பட்டில் Buds Air 6 Pro போலவே 49dB வரையிலான ANC, IP55 ரேட்டிங், 30 மணி நேர பேட்டரி மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.