சென்னை. தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தில் துணையுடன் உலகை வலம் வருகின்றனர்.
இன்றைக்கு இந்தியாவின் முன்நோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ் மொழியிந் சிறப்புக்காக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.