பசிபிக் பெருங்கடலின் ஆழத்தை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அபூர்வ கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கண்டுபிடித்தது கடலுக்குள் உள்ள ஒரு மலையில் மஞ்சள் செங்கற்களால் ஆன சாலையாகும். பூமியின் மேற்பரப்பில் 71 சதவீதம் தண்ணீரால் மூடப்பட்டு, உலகம் பல பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் இன்னும் பல மர்மங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அதிர்ச்சி அளிக்கும் கண்டுபிடிப்பு 2022ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்குப் புறமாக உள்ள ஆழ்கடல் சிகரத்தில் நடைபெற்ற ஆய்வின் போது இடம்பெற்றது. இதன் காட்சி YouTube-ல் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. விஞ்ஞானிகள் பாப்பஹானமோகுவாக்கியா கடல் தேசிய நினைவுச்சின்னத்திற்குள் உள்ள லிலிʻஉகோகலானி முகட்டை ஆய்வு செய்த போது, அந்த பகுதியை ஆராய்ந்த நாட்டிலஸ் ஆய்வுக் கப்பல் இந்த பழங்கால வறண்ட ஏரியின் அடிப்பகுதியை கண்டுபிடித்தது.
பாபஹனமோகுவாக்கியா கடல்சார் தேசிய நினைவுச் சின்னம் உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 3 சதவீதம் மட்டுமே விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடல் மேற்பரப்பிலிருந்து 3,000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த பகுதியின் ஆராய்ச்சியில் பெருங்கடல் ஆய்வு அறக்கட்டளை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மஞ்சள் செங்கல் சாலை கடலுக்கு ஆயிரம் மீட்டர் கீழே அமைந்திருந்தாலும், ஆய்வாளர்கள் அதற்குள்ளே கண்டுபிடித்த ஏரியின் அடிப்பகுதி மிகவும் வறண்டதாக இருக்கின்றது. இதன் பாறை மேற்பரப்பில் ஃபெரோமாங்கனீஸ் மேலோடுகளுக்குள் வாழும் நுண்ணுயிர் சமூகங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வு, கடல் மலைகளின் வாழும் சமூகங்கள் மற்றும் அவற்றின் பண்புகளைக் குறித்து புதிய தகவல்களை வழங்கும். இந்த கண்டுபிடிப்பு, பூமியின் மறைக்கப்பட்ட புவியியல் பற்றிய பல புதிய தகவல்களை விரைவில் அறிவோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.