சென்னை: இதுகுறித்து, தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில், மதுபான வினியோக நிறுவனங்களில், அமலாக்க இயக்குனரகம் நடத்தும் சோதனையில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
மதுபான ஆலைகள் தொடர்பான ஆவணங்களை அமலாக்க இயக்குனரகம் அடையாளம் கண்டுள்ளது. ரூ. 1000 கோடி லஞ்சமாக பெறப்பட்டது, அவை தற்போது கணக்கில் இல்லை. இது தொடர்பாக தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது. மேலும், முதலமைச்சராக நீடிக்க அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா என்று தன்னை தானே கேட்க வேண்டும்.

திமுக ஆட்சியில் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல், மதுபான ஆலைகளுக்கு பணம் சம்பாதிப்பது தமிழகத்தையே உலுக்கியது. திமுகவினரின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் மார்ச் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.