சென்னை: மாநிலத்தின் பல்வேறு பாதைகளில் செமி ஹைய் ஸ்பீட் ரயில் வலையமைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை ஆராய்வோம் என்று பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் வலையமைப்பின் விரிவாக்கத் திட்டங்களை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்புவோம்
மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து ப்ராடெக்ட் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் இன்னோவேஷன் துறையில் ஆராய்ச்சி செய்யும் உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயது மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்அப் வழங்கப்படும்.
மதுரை மற்றும் கடலூரில் தோல் அல்லாத காலணி பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன, இதன் மூலம் ஒவ்வொரு இடத்திலும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.