சென்னை: கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.
உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை. ஊரகப் பகுதிகளில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். ஊரகப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும்.
இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம். 2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.