புதுடில்லி: மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாறும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறையின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி – கன்னியாகுமரி சாலை, ராமநாதபுரம் – ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலை, கோவை – சத்தியமங்கலம் சாலை, சத்தியமங்கலம் – கர்நாடக எல்லை வரை விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடுதலாக பல புறவழிச் சாலை திட்டங்களும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.