சென்னை : ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது என்ற நடவடிக்கையை காவல் துறையினர் எடுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் போலீசார் நடவடிக்கை தீவிரமாகி உள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் இதை ஆரம்ப கட்டத்திலேயே விட்டு விடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.