சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தால், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாகுபாடின்றி ஆளும் கட்சி சமமாக நடந்து கொள்ள வேண்டும்.
அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று தெரிந்தும் கொண்டு வந்ததற்குக் காரணம், நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். கடந்த காலங்களில் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும், இந்த 4 ஆண்டுகளில் எடுக்காத கடனை, தி.மு.க., பெற்றுள்ளது.

ஆனால், புதிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அதே போல் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு போடுவோம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது; “அதைத் தடுக்க முடியாது, முயற்சி செய்பவர்கள் மூக்கை உடைத்துக்கொள்வார்கள்” என்று அவர் கூறினார்.