By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் தங்கசங்கிலி பறிப்பு சம்பவத்தில் சிக்கிய வட மாநில கும்பல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சென்னையில் தங்கசங்கிலி பறிப்பு சம்பவத்தில் சிக்கிய வட மாநில கும்பல்
தமிழகம்

சென்னையில் தங்கசங்கிலி பறிப்பு சம்பவத்தில் சிக்கிய வட மாநில கும்பல்

Nagaraj
Last updated: March 26, 2025 8:07 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை : சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் வட மாநில கும்பல் சிக்கியது எப்படி? என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை சைதாபேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலை ஆறு மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஒரு மணிநேரத்திற்குள் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு, புனித தோமையர் மலை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 6 மணியளவில் திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த 54 வயது பெண்மணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 8 சவரன் நகையைப் பறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் மனு கொடுத்துள்ளார். அடுத்து சாஸ்திரி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 66 வயது மூதாட்டியிடம் இருந்து 4 கிராம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாக பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வயதான பெண்களைக் குறிவைத்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக அங்குள்ள காவல் நிலையங்களில் புகார் பதிவானது.

இதில் சில சம்பவங்கள் அடையாறு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஹைதராபாத் செல்வதற்குத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வைத்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.

இதையடுத்து, விமான நிலையத்தில் வைத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள், சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாக அறியப்பட்டதன் அடிப்படையில் தனிப்படையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை விமான நிலைய நுழைவு வாயிலிலும் மற்றொரு நபரை விமானத்தின் உள்ளேயும் சென்று கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் இரண்டு பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்னரும் இதேபோல தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை மூன்று மணிநேரத்தில் காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:airportChennaiincidentInvestigationjewelry snatchingnorthern state residenttwo arrestedஇரண்டு பேர் கைதுசம்பவம்சென்னைநகை பறிப்புவட மாநிலத்தவர்விசாரணைவிமான நிலையம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?