மும்பை: மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அப்போது ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார். பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானியின் பெற்றோர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.