பெங்களூரு: ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிப்பதற்காக 2022-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி ஊபர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத். அப்போது, பைக் டாக்சிகளுக்கு உரிய சட்டம் இயற்றும் வரை, வணிகப் போக்குவரத்து வாகனமாக பைக்குகளை இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்தார். மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் உரிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும் வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும் 6 வாரங்களுக்குள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்ட அவர், 6 வாரங்களுக்கு பிறகு பைக் டாக்சிகளின் இயக்கம் நிறுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.