தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதன் காரணமாக, அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகாமல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக, கடந்த வாரம் அவர் டெல்லி சென்று பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக-பாஜக கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை இந்த கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், தலைவரின் பதவியில் இருந்து விலகுவேன்” என கூறியுள்ளார். இதனிடையில், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் விலக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை” என அறிவித்துள்ளார். மேலும், “நான் யாரையும் கைகாட்டவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தலைவராக பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம்” என்றார்.
அவரது பணி தொண்டனாக தொடரும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான கருத்துகளை விரிவாகப் பேசியுள்ளார். “பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்லும், அதை மட்டும் செய்கிறேன்” என கூறிய அண்ணாமலை, தலைவராக இல்லையென்றால், “ஒரு விவசாயியின் மகனாக இருப்பேன்” என கூறி, “தொண்டனாக என் பணி தொடரும்” என்றார்.
மேலும், “நான் டெல்லி போனால் ஒரு இரவில் திரும்பும் ஆள். இந்த மண்ணை விட்டு நான் செல்ல மாட்டேன்” என அவர் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தன் நிலைப்பாடுகளை ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.