ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த், ஆழ்ந்த மத மற்றும் ஆன்மிக மனநிலையைக் கொண்டவர். இவர் இந்தியாவின் பல புனித கோயில்களில் அடிக்கடி பயணித்து, பராமரிப்பில் பங்களிக்கிறார். புனித பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் தாம்களில் அவர் அறங்காவலராக உள்ளார். இந்நிலையில், அனந்த் அம்பானி தற்போது ஒரு ஆழமான ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜாம்நகரிலிருந்து துவாரகாவில் உள்ள புனித துவாரகாதீஷ் கோவிலுக்கான 170 கி.மீ பாதயாத்திரையை அவர் மேற்கொண்டு வருகிறார். இவர் தினமும் சுமார் 6 முதல் 7 மணி நேரம் செலவிட்டு, தினமும் 20 கி.மீ பாதையில் நடந்து செல்கிறார்.

இந்த யாத்திரை, ஒரு சடங்காக அல்லாமல், தூய பக்தியின் செயலாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணருக்கு உடல், மனம் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்து, அனந்த் அம்பானி துவாரகாதீஷின் அருளையும், சனாதன தர்மத்தின் கொள்கைகளையும் சரணடைகிறார். இந்தப் பயணம் அமைதி, தனிமை மற்றும் தெய்வீகத்தைத் தேடுவது பற்றியது.
அனந்த் அம்பானி, குஷிங்ஸ் நோய்க்குறியாலும், குழந்தைப் பருவத்திலிருந்தே ஆஸ்துமா, கடுமையான நுரையீரல் நோய் போன்றவையுடன் போராடி வருகிறார். இந்த பாதயாத்திரை அவருக்கு உடல் ரீதியாக சவாலாக இருக்கும். இருப்பினும், இது வலிமையை நிரூபிக்கும் பாதயாத்திரையாக அல்லாமல், நம்பிக்கையை மேலோங்க வைக்கும் ஒரு பயணமாக அமைந்துள்ளது.
பாதயாத்திரை செல்லும் வழியில், உள்ளூர் சமூகத்தினரிடமிருந்து அனந்த் அம்பானிக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. சிலர் அவர் மூலம் துவாரகாதீஷின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். முக்கிய ஆன்மிக பிரமுகர்களான பாகேஷ்வர் தாம் தலைமை பூசாரி தீரேந்திர சாஸ்திரி மற்றும் வைஷ்ணவாச்சாரியார் ராஸ்ராஜ் மகாராஜ் ஆகியோர் ஆதரவாக இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.
அனந்த் அம்பானிக்கு ஹனுமான் சாலிசா, ராமாயணத்திலிருந்து சுந்தரகாண்டம் மற்றும் தேவி ஸ்தோத்திரங்கள் போன்ற மத மந்திரங்கள் கூறப்படுகிறது. இளம் வயதினருக்கு இந்த அளவு மத மற்றும் ஆன்மிக முதிர்ச்சி இருப்பது அரிய பரிசாகவே பார்க்கப்படுகிறது.
இந்த தனிப்பட்ட பயணத்தின் மூலம், அனந்த் அம்பானி ஒரு தலைமுறைடம் பேசுகிறார். அவர் தனது 30ஆவது வயதை அடைவதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 8ஆம் தேதி துவாரகாதீஷ் கோயிலை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.