மேஷம்: குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பும். வெளிநாட்டுப் பயணத்திற்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயங்களும் அனுகூலங்களும் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள்.
ரிஷபம்: திருமண முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள்.
கடகம்: தடைகள், கவனச்சிதறல்கள், அலைச்சல்கள் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய கடன்களை வசூலிக்க சிரமப்படுவீர்கள். ஆன்மிகம் அதிகரிக்கும்.
சிம்மம்: புதிய நண்பர்களுடன் பழகுவீர்கள். விருந்தினர்களால் வீடு நிரம்பி வழியும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

கன்னி: தீர்க்க முடியாத பிரச்சனையில் இருந்து விடுபட மாற்று வழி காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமும் தோற்றமும் அதிகரிக்கும். பணவரவு மற்றும் பொருள் வரவு இருக்கும்.
துலாம்: மனம் திறந்து பேசி காரியங்களை சாதிப்பீர்கள். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே பாசப்பிணைப்பு ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.
விருச்சிகம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உடல் சோர்வு நீங்கும். வயிற்று வலி குணமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக ஆர்வம் இருக்கும்.
தனுசு: பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள் ஆனால் வெளியூர் பயணம், அலுவலக விஷயங்களால் சலசலப்பு ஏற்படும்.
மகரம்: புதிய எலக்ட்ரானிக், மின்சாதன பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி மூலம் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகள் தீரும். முக்கிய நபர்களை சந்திப்பதால் உங்களின் தொழிலில் அனுகூலங்கள் உண்டாகும்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தேவையற்ற மற்றும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும்.