தெலுங்கானா: முழு உரிமை உள்ளது… விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவனாம்சம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிதித்திருந்தது. மிகவும் முக்கியமான தீர்ப்பாக இந்த தீர்ப்பு பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு பராமரிப்பு செலவுக்கான ஜீவனாம்சம் வழங்குவது என்பது இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக வாரியம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.