தஞ்சாவூர்: குறுவை கொள்முதலுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொல்கத்தாவில் இருந்து 54 லட்சம் சாக்குகள் ரயில் மூலம் வந்தது.
தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது 90 சதவீதம் அறுவடை எட்டியுள்ள நிலையில் கொள்முதலுக்கு தேவையான சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வரவழைத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை 54 லட்சம் சாக்குகள் கொண்டு வரப்பட்டன.
அதனை 300 லாரிகளில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பிள்ளையார்பட்டி இரும்புத்தலை சேமிப்பு கிடங்குகள் மற்றும் அம்மன் பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலை ஆகியவற்றுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குருவையில் இன்னும் 50,000 டன் கொள்முதல் செய்ய உள்ள நிலையில் அதற்கு 2.25 லட்சம் சாக்குகள் தேவைப்படுகிறது.
மீதமுள்ள சாக்குகள் டிசம்பர் மாதம் கொள்முதல் தொடங்க உள்ள சம்பா சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் என நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்