தஞ்சாவூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய, சமுதாய வள பயிற்றுநர்களுக்கான, இயற்கை வேளாண்மை பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி என்.முத்துக்குமரன் தொடக்க உரை ஆற்றினார். இதில் தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் மேலாண்மைகள் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சிகளை எங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளிடம் எடுத்துச் செல்வோம் என உறுதி அளித்தனர். இப்பயிற்சியில் மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 30 சமுதாய வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். ஐந்து நாள் பயிற்சி நிறைவு பெற்றது.
இதில் தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அருண்குமார், தஞ்சாவூர் உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) ச.சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்ட வள வல்லுனர் (பண்ணை) ஏ.இ.சுரேஷ்குமார், ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் என்.செந்தில்குமார், எம்.சுருளிராஜன், எம்.விஜயபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.