திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்ட மூன்று நாட்களில் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர். நேற்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும், மதியத்திற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஆன்லைனில் 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் முன்பதிவு செய்தனர்.
இதில், இரவு முடியும் வரை 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக நடைபாதை திறக்கப்பட்டபோது நெரிசல் அதிகரித்தது. இதனால், நடை அடைக்கப்பட்ட போதும் பக்தர்களை 18-ம் படி ஏற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வழியாக வரும் பக்தர்கள் கோயிலின் வடக்கு மாடவீதியில் காத்திருக்க வேண்டியுள்ளது. வாயில் திறந்ததும் தரிசனத்திற்கு முதலில் அனுமதிக்கப்படுபவர்கள் இந்த பக்தர்கள். மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18-வது படியில் ஏறியவுடன் நடைபாதையில் செல்லாமல் நேரடியாக தரிசனம் செய்யலாம்.
இந்நிலையில், சபரிமலை கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 18-வது படியில் பக்தர்களை விரைவாக அழைத்துச் செல்ல போலீசாருக்கு புதிய வசதி சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் 18ம் படி ஏறுவதை புனிதமாக கருதுகின்றனர். பக்தர்களை சிரமமின்றி ஏற்றிச் செல்ல 18-வது படியில் போலீசாருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 18-வது படியில் இருபுறமும் போலீசார் அமர்ந்தோ அல்லது நின்று கொண்டு பக்தர்களை இரு கைகளாலும் பிடித்துக் கொள்ளலாம். இதற்காக சிறிய இரும்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 18-வது படியில் பக்தர்களை போலீசார் வேகமாக ஏற்றி வருகின்றனர்.
தற்போது 18 படிகளில் நிமிடத்திற்கு 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏறுகின்றனர். சபரிமலை தந்திரியின் சிறப்பு அனுமதியுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் காயம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 30 பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, அட்டிவளைவு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக எருமேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.