திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-
ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் சேவை வழங்கப்படும். தரிசனத்தை முன்பதிவு செய்யும் போது, தங்குமிடம், பூஜை மற்றும் பிரசாதம் ஆகியவற்றையும் பதிவு செய்யலாம். சில பக்தர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் சபரிமலைக்கு வர முடியாமல் போகலாம். இதனால் அவர்களுக்கு சபரிமலையில் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை.
இப்போது முதல் முன்பதிவு நேரத்தில் சபரிமலைக்கு வர முடியாவிட்டாலும் அறை கிடைக்கும். இதற்காக பம்பில் செக்-இன் கவுண்டர் திறக்கப்படும். இங்கு பக்தர்கள் தேவையான ஆவணங்களை சமர்பித்தால் தங்கும் வசதி செய்து தரப்படும். ஆன்லைனில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் சராசரியாக 5,000 முதல் 10,000 பக்தர்கள் சபரிமலைக்கு வருவதில்லை.
முன்பதிவு நாளில் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள், தேவசம் போர்டில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.