தஞ்சாவூர்: தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பெரு விழாவை ஒட்டி இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பெருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நாள்தோறும் மாலை நேரத்தில் கோவில் மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று நாதஸ்வரம் மற்றும் வாய்ப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கர்நாடக இசை ரசிகர்கள் இன்னிசை நிகழ்ச்சியை ரசித்து கண்டு களித்தனர்.
விழாவை ஒட்டி கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.