குடகு: பிரம்ம குண்டத்தில் உள்ள காவிரி நீருக்கு குங்குமம் மற்றும் புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேவையையும் தீர்த்து வைத்து வரும் காவிரி ஆற்றை போற்றும் விதமாக, காவிரியின் பிறப்பிடமான குடகில் உள்ள தலைக்காவிரியில் வழிபாடு நடத்தப்பட்டது.
அர்ச்சகர்கள் பிரம்ம குண்டத்தில் உள்ள காவிரி நீருக்கு குங்குமம் மற்றும் புஷ்பார்ச்சனை செய்தபின் காவிரி நீரை தீர்த்தப்பிரசாதமாக வழங்1கினர். இதில் திரளான மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.