சென்னை: ஏராளமான மருத்துவ நன்மைகளை தரக்கூடிய வாழை இலைகள் குறித்து, ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள அற்புதமான விஷயங்கள் என்ன தெரியுமா? உணவை வாழை இலையில் உண்பதால் இதய நோய் வராமல் தடுக்கும். புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும். வாழை இலைகள் வறுமையை போக்குவதற்கு உதவும் பரிகாரங்களில் உள்ளன.. ஏன் தெரியுமா? கடவுளுக்கு ஏன் வாழையிலையில் படையல் வைக்கப்படுகிறது தெரியுமா?
மருத்துவ குணம்: வாழையிலைகளை பொருத்தவரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை.. இந்த இலையின் மேலுள்ள பச்சைத்தன்மைக்கு குளோரோபில் என்பார்கள்.. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணமடைய செய்து, வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றும் தன்மை இந்த வாழையிலைக்கு உள்ளது.. அஜீரண பிரச்சனையையும், அல்சர் பிரச்சனையையும், தோல் நோய்கள் ஏற்படுவதையும் இந்த வாழையிலை தடுத்துவிடும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் வாழையிலைகளுக்கு பெரும்பங்கு உண்டு. அதனால்தான், வாழையிலையில் சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. இதனால் மனித ஆயுளும் நீடிக்க செய்கிறது. இலையில் உண்பதால் இதய நோய் வராமல் தடுக்கும். புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும் என்கின்ற ஆய்வுகள். இத்தனை மருத்துவ குணம் வாய்ந்த வாழை இலைகள், விருந்தோம்பலில் முதலிடம் வகிக்கிறது.. அத்துடன் ஆன்மீகத்திலும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
தெய்வங்கள்: காரணம், சில கடவுள்களுக்கு வாழையிலையில் படையல் செய்வது, கடவுளின் ஆசீர்வாதத்தை எளிமையாக பெற முடியும் என்பது ஐதீகமாக உள்ளது.. அந்தவகையில், விஷ்ணு, விநாயகர், மகாலட்சுமி, துர்கை போன்ற தெய்வங்களுக்கு வாழையிலையில் படையல் வைப்பார்கள். வாழைத்தண்டில் மகாவிஷ்ணுவும் லட்சுமி தாயாரும் வசிப்பதால், விஷ்ணுவுக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்வதால், சகல ஆசிகளையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இதன்மூலம் திருமண தடைகள் நீங்குவதுடன், குடும்பத்திலுள்ள வறுமையும் நீங்கும் என்பார்கள்.
பணக்கஷ்டம்: விநாயகருக்கு வாழைப்பழம் பிடிக்கும் என்பதால், விநாயகருக்கும் வாழை இலையில் அர்ச்சனை செய்வார்கள. இதனால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி, புதன் தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், பணக்கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.. அதேபோல, மா ஜெகதம்பாவிற்கு வாழையிலையில் அர்ச்சனை செய்து, அவரது ஆசிர்வாதத்தை பெறுவதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்.
ஆனால், கடவுளுக்கு படையல் போடும்போது வாழையிலைகளில் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக, வாழை இலையை போடுவதற்கு முன்பு, சிறிய கோலமிட்டு, அந்த கோலத்தின் மீது வாழை இலையை பரப்பி, படையல் போட வேண்டும்.. அப்போது வாழையிலையின் காம்பு பகுதி கடவுளையும், அதன் நுனிப்பகுதி நம்மையும் பார்த்தபடி போட வேண்டும். இதற்கு காரணம், கடவுளை விட நாம் உயர்ந்தவர் கிடையாது என்பதை உணர்த்தவும், மனிதனின் ஆணவம், அகங்காரத்தையும் குறைப்பதற்காகவும் இந்த முறையில் வாழையிலையை போட வேண்டும். உப்பு, காரம்: அதேபோல, துளசி இலைகள் போடப்பட்ட தீர்த்தத்தை, வாழை இலையை தண்ணீர் தெளித்து விட வேண்டும். இந்த துளசியை படையலுக்கும், தெய்வத்தின் பாதங்களிலும் வைக்கலாம். ஆனால் படையலில் உப்பு பரிமாறக்கூடாது..அதேபோல, காரம், எண்ணெய் போன்றவற்றையும் குறைவாகவே சேர்க்க வேண்டும்.. அதற்கு பதிலாக படையலுக்கு சேர்க்கப்படும் பொருட்களில் நெய் அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம்.