திருப்பதி: பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட் கிடைக்கும் தேதிகளை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரசேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என்றும் 23-ம் தேதி அங்கப்பிரதட்சணம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டிக்கெட்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
24-ம் தேதி காலை 10 மணிக்கு, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டும் பிற்பகல் 3 மணிக்கு திருமலை, திருப்பதியில் தேவஸ்தான தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.