மேஷம்: சாமர்த்தியமாக பேசி இலக்கை அடைவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்: முன்கோபம், தேவையற்ற அலைச்சல் வரலாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சண்டையிட்டு கடன்களை வசூலிப்பீர்கள். உங்கள் பங்குதாரர் உங்களுக்கு ஆதரவளிப்பார். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
கடகம்: மனதில் இருந்த பயம் நீங்கும். பண வரவு மற்றும் செல்வாக்கு இருக்கும். உடைந்த வாகனம் சரி செய்யப்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்: சகோதரன் மூலம் உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு உயரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி: எதிர்பாராத வருமானத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளி உலகில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்கள் வேண்டாம்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். நட்பின் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். ஆன்மிகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.
விருச்சிகம்: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். முடிவெடுப்பதில் தயக்கம் இருக்கும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக்கொள். தொழிலை விரிவுபடுத்தும் போது கவனமாக இருங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
தனுசு: உங்களுக்கு பிடித்தவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொன்னதைக் காப்பாற்றும் வகையில் அலுவலகத்தில் உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள்.
மகரம்: மறதியால் பிரச்னைகள் வந்து மறையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு ஆதரவாக இருங்கள். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். அன்புக்குரியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் கூடுதல் வேலை கிடைக்கும். உரிய அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் விஷயமாக பயணம் மேற்கொள்வீர்கள்.
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மனதில் பட்டதை பேசுவீர்கள். உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.