மேஷம்: சாமர்த்தியமாக பேசி இலக்கை அடைவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். வியாபாரத்தில் பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.
ரிஷபம்: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு அடிபணியுங்கள். விருந்தினர்களால் வீடு கலகலப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் யார் மீதும் பகைமை கொள்ளாதீர்கள்.
மிதுனம்: உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். பண வரவு இருக்கும். வெளி உலகில் உங்களின் அந்தஸ்து உயரும். உங்கள் வாகனம் நல்ல நிலையில் இருக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
சிம்மம்: சகோதரன் மூலம் உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களின் தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் தொழில் வளம் பெறும்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உங்களின் தொழில் கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
விருச்சிகம்: பிரபலங்களின் சந்திப்பால் திருப்தி அடைவீர்கள். தம்பதியர் இடையே உறவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அலுவலகத்தில் அனைவருடனும் இணக்கமாகச் செயல்படுவது நல்லது.
தனுசு: கோபத்தை தவிர்க்கவும். உங்கள் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். அலுவலகத்தில் கோப்புகளை கையாளும் போது அலட்சியமாக இருக்க வேண்டாம். தொழில் பங்குதாரரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
மகரம்: உங்கள் அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் வணிகத்திற்கு வருவார்கள். உங்கள் தொழில் வளம் பெறும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர்கள். உங்கள் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உங்களின் தொழிலில் உயர்வைக் காண்பீர்கள்.
மீனம்: விருந்தினர்களால் வீடு நிரம்பி வழியும். மனதில் பட்டதை பேசுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்க வேலை உண்டு என்று இருங்கள். வியாபாரத்தில் கடன்களை வசூலிப்பீர்கள். பழைய பணியாளர்களை மாற்றுவீர்கள்.