மேஷம்: பயம் நீங்கி தைரியம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே உறவு அதிகரிக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும்.
ரிஷபம்: நீங்கள் விரும்பும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன்-மனைவி இடையே மனம் திறந்து பேசுவீர்கள்.
மிதுனம்: வெளியுலகில் புதிய நண்பர்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தாமதமான வழக்கு சாதகமான திருப்பத்தை எடுக்கும். அரசு, வங்கிக் காரியங்கள் விரைந்து முடிவடையும்.
கடகம்: பல காரியங்களைச் செய்து முடிக்க சிரமப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுப்பு செய்யுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.

சிம்மம்: பழைய பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகத்தைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் விரைந்து முடிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
துலாம்: நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். தொழிலில் பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும். ஆன்மிகம் அதிகரிக்கும்.
தனுசு: பல சவால்களை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். வியாபாரத்தில் நிதானம் தேவை.
மகரம்: பால்ய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் வந்து நீங்கும். ஆன்மிகம் அதிகரிக்கும்.
கும்பம்: திடீர் பணவரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். வாகனச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் செயல்படுவீர்கள். உங்கள் முகம் தெளிவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.