தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைஒட்டி தஞ்சாவூரில் கிருஷ்ணர் சிலைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
கிருஷ்ணர் ஜெயந்தியை ஒட்டி வீடுகளில் கிருஷ்ணர் சிலை வைத்தும், வீடு முழுவதும் கிருஷ்ணர் நடந்து செல்வது போல் அலங்கரிக்கப்படும்.
இந்த விழாவையொட்டி தஞ்சையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றன. கிருஷ்ணர் சிலையானது அரை அடி முதல் மூன்று அடி வரை உள்ளன. இந்த சிலைகளானது 100 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்பனை ஆகிறது.