மென்மையான மண்: முழுக்க முழுக்க தூய்மையான மண்ணை கொண்டே இந்த கூட்டினை குளவிகள் கட்டுகின்றன.. அதாவது, மரத்தின் கூழிலிருந்தும், சிதைந்துபோன மரங்களிலிருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களாலேயே கடித்து அதனை மென்மையாக்கி விடுமாம்.. இந்த தூளில் தன்னுடைய எச்சிலை கலந்து, அதில்தான் அறுகோண கூட்டை உருவாக்கும். இந்த கூட்டிலேயே அறைகளையும் அமைத்து கொள்ளும். ஒவ்வொரு அறைக்குள்ளும், ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்து கொள்ளும்.
பெரும்பாலும், இனப்பெருக்கத்துக்காகவே இந்த கூடுகளை குளவிகள் கட்டுகின்றன.. எனவே, வீட்டில் குளவிகள் கூடு கட்டினால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பார்கள்.. வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்குமாம்.. கடன் வாங்கியிருந்தாலும், அதை எளிதாக திருப்பி தர முடியும்.. கடன் கொடுத்திருந்தாலும், அந்த பணம் சிரமமின்றி திரும்ப கிடைத்துவிடுமாம்.
வடகிழக்கு: அதுமட்டுமல்ல, பூஜையில் குளவிகள் கூடுகள் கட்டினால் அது மிகவும் நல்லது.. அதுவும் வடகிழக்கு மூலையில் கூடு கட்டினால், அது இன்னும் நன்மைகளை தரக்கூடியது. இந்த கூடுகளை எக்காரணம் கொண்டும் கலைத்துவிடக்கூடாது. ஆனால், சமையலறையில் கூடுகளை கட்டிவிட்டால், அது நிதி ஆதாரத்தை பலவீனமாக்கி, வறுமையில் தள்ளிவிடுமாம்.. அதேபோல, புதிதாக கூட்டை கட்டிவிட்டு, குளவிகள் அதிலிருந்து வெளியேறி விட்டால், வீட்டில் ஏதோ சிக்கல் என்று அர்த்தமாம்.. இது அபசகுணமாகவும் கருதப்படுவதால், உடனே அந்த கூட்டினை கலைத்து அப்பறப்படுத்திவிட வேண்டும்.
சுண்ணாம்பு: அதேபோல, குளவிகள் எதிர்பாராமல் கொட்டிவிட்டால், விஷம் ஏறிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளவி கொட்டிய இடத்தில் சிறிதளவு சுண்ணாம்பு வைத்தால், விஷம் ஏறாமல் இருக்கும் என்பார்கள்.. அதேபோல குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல் குளவி கூடு கட்டிவிட்டால், அந்த கூட்டினை கலைத்துவிட வேண்டும். மேலும், அந்த இடத்தில் கோமியத்தை மீண்டும் மீண்டும் தெளித்து வந்தால், அதே இடத்தில் குளவிகள் கூடு கட்டாது.