தஞ்சாவூர்:
தஞ்சாவூர்: ஆகம விதிகள் படி அமைந்துள்ள கும்பகோணம் மகாமக குளம் பற்றி தெரியுங்களா?
கும்பகோணம் மகாமகம் குளம் மொத்தம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுவாக கோவில் குளங்கள் சதுர வடிவில் இருக்கும். ஆனால் மகாமகம் குளம் சதுரமாக தோன்றினாலும் சற்று மாறுபாடு கொண்டது.
குளத்தின் நாலாபுறமும் கருங்கல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 படிகள் கொண்டதாக அந்த படித்துறை உள்ளது. ஆகம விதிகளில் 18க்கு எப்போதும் தனித்துவமும் ஆற்றலும் உண்டு.
அந்த விதிப்படி 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் நீராடலாம். மகாமகம் குளம் 19 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.