ஆந்திரா: புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருப்பதியில் உள்ள திருமலையில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் ஐந்தாவது கிலோமீட்டர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையின் உயரமான இடங்களில் இருந்து கற்கள் மற்றும் மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தேவஸ்தான பொறியியல் துறையினர் அங்கு சென்று விழுந்த கற்கள் மற்றும் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மலைப்பாதையில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.