திருமலை: திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் 7-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பர், சூரிய நாராயணராய், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே திருமலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சூர்ய பிரபை வாகன சேவை சிறிது நேரம் கூடாரத்தின் கீழ் நடத்தப்பட்டது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வாகன சேவையை முன்னிட்டு, காளைகள், குதிரைகள், யானைகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து நடனமாடியவர்கள், ஏராளனமானவர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஊர்வலம் சென்றனர்.
திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். நேற்று இரவு சூர்யபிரபை வாகனத்தை தொடர்ந்து மலையப்பர் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு பவனி வந்தது. திருமலை சந்திரனுக்குரிய திருத்தலமாகும்.
அதனால் ஒவ்வொரு பௌர்ணமி இரவில் கருட வாகனத்தில் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் பிரம்மோற்சவ நாட்களில் சந்திர திருத்தலத்தில் இருந்து முத்துப்பல்லக்கு வாகனமும் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை தேர் திருவிழா நடக்கிறது. ஸ்ரீதேவியும், பூதேவியும் தேரில் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதைத் தொடர்ந்து பிரம்மோத்ஸவத்தின் இறுதி வாகன சேவையான குதிரை வாகன சேவை நடைபெறும்.
பின்னர் நாளை காலை வராஹ ஸ்வாமி கோவில் அருகே கோவில் குளத்தில் சக்ரா சனனம் நடக்கிறது. பின்னர் நாளை மாலை பிரம்மோற்சவ கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.