பழனி: தைப்பூசம் திருவிழாவை ஒட்டி இன்று இரவு பழநியில் திருக்கல்யாணம் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இதை முன்னிட்டு இன்று (பிப்.10) இரவு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (பிப். 11) நடைபெறுகிறது. 14ம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இந்நிலையில் இன்று 20 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப். 10) முதல் 12ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய் யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத் தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.