தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள சுவாமிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.
முருகனின் நான்காம் படை வீடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மார்ச் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், ஏப்ரல் 11ஆம் தேதியும் பங்குனி உற்சவர் திருவிழா நடைபெற உள்ளது.