திருவனந்தபுரம்: ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
இதையொட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி பிரம்மதத்த நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
நேற்று மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. ஓணம் சிறப்பு பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.
சபரிமலை கோவில் நடை 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடக்கிறது. சபரிமலையில் நேற்று மாலை நடை திறந்ததும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி நாளை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.