திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகள் நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டர ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி பூஜையை திறந்து வைக்கிறார்.
இன்று வேறு பூஜைகள் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். இரவில் படி பூஜையும் நடைபெறும். வரும் 17-ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.