திருவண்ணாமலை: மாட்டுப்ொங்கலை ஒட்டி பழம் காய் கனிகளுடன் அண்ணாமலையார் கோவில் நந்திக்கு சிறப்பு வழிபாடு அளித்தது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார்.
ன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரியனுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.