தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயில் எதிரில் அருள் பாலிக்கும் சுந்தர மகா காளியம்மன் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் வரை திருவிழா நடைபெற உள்ளது.
இதில் ஏப்ரல் 14 மாலை 5 மணி அளவில் காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதி உலா காட்சி நடைபெறும். ஏப்ரல் 15 முதல் 21 வரை காளி திருநாள் நடைபெறும்.
சிறப்பு மிக்க இந்த திருவிழாவில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.