சென்னை: கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான். இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன.
அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.
இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணம், கல்யாணம், கரு உருவாக (புத்திரபாக்கியம்) – கருவளர்ச்சேரி, கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற – திருக்கருக்காவூர், நோயற்ற வாழ்வு பெறுவதற்கு – வைத்தீஸ்வரன் கோவில், ஞானம் பெற – சுவாமிமலை.
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர், எடுத்த காரியம் வெற்றி பெற மற்றும் மனதைரியம் கிடைக்க – பட்டீஸ்வரம். இப்படி ஒவ்வொரு கோயிலும் ஒரு விசேஷம் உண்டு. இதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து பலன் பெறுங்கள்.