தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குடந்தை மகாமகம் குளத்தில் நடைபெற்ற ஆரத்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா 12 சைவ தலங்கள், 5 வைணவ தலங்களில் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலாவும், தேரோட்டமும் நடைபெற்றது. மாசிமகமான நேற்று மகாமக குளத்தில் ஆரத்தி விழா நடைபெற்றது. ஆரத்தி விழாவில் பஞ்சரத்தின தீபாராதனை, நாக தீபாராதனை என பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்த ஆரத்தி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.