மேஷம்: மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் முக்கிய பிரமுகர்களின் நட்பைப் பெறுவீர்கள். சாதிக்கும் ஆசை அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: அன்புக்குரியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் வருகை தருவார்கள். கூட்டுத் தொழிலில் வீண் வாக்குவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
கடகம்: முக்கிய பிரமுகர்களுடன் பழகுவீர்கள். வேற்று மொழி மற்றும் மதத்தினரால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்: பழைய கடன்களை தீர்க்க புதிய வழியை யோசிப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நிலை மேம்படும். நண்பர்கள் உங்களை சந்திக்க வருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். தொழில் வளம் பெறும்.

கன்னி: உறவினர்கள், நண்பர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்.
துலாம்: சில பிரபலங்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். தொழிலில் பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விரோதம் வேண்டாம்.
விருச்சிகம்: பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வணிகத்தின் மூலம் விஐபிகள் அறிமுகம் செய்யப்படுவார்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: சிலருக்கு திடீர் அறிமுகம் ஆதாயம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை சந்திக்க வருவார்கள். இழுபறியாக இருந்த அரசு வேலை முடியும். தொழில், வியாபாரம் செழிக்கும்.
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டு நிறைவேற்றுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். பிள்ளைகளின் அன்பில் திளைப்பீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக்கொடுப்பீர்கள். சில வேலைகளை முடிக்க சிரமப்படுவீர்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: தம்பதியரிடையே இருந்த ஈகோ பிரச்சனை படிப்படியாக மாறும். வாகனச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் மேலதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டாம்.