மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். உங்கள் தந்தை வழி உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
மிதுனம்: மனதில் தைரியம் பிறக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும். பணப் பிரச்சனைகளை சாமர்த்தியமாக கையாளுவீர்கள். வேலைப்பளு குறையும். சமூகத்தில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள்.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கூடும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடிவடையும். கலைப் பொருள்கள் கைக்கு வரும்.

சிம்மம்: சொத்து விஷயங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
கன்னி: குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டிற்கு தேவையான நவீன மின்சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்களின் பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
துலாம்: கைமாறாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். உங்களால் ஆதாயம் அடைந்த சிலர் உங்களை சந்திப்பார்கள். வெளியூர் பயணம் அமையும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். ஓரளவு பணவரவு இருக்கும். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
மகரம்: சவாலான பணிகளை சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர மரியாதை இருக்கும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
மீனம்: எடுத்த காரியம் நீண்ட தாமதத்திற்குப் பின் முடிவடையும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத செலவுகள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம்.