மேஷம்: தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். யோகா மற்றும் தியானம் உங்கள் மனதிற்கு உதவும். வியாபாரம் சூடு பிடிக்கும். நிலுவைத் தொகை வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். உங்களின் தொழிலில் ஏற்றம் உண்டாகும்.
மிதுனம்: விலை உயர்ந்த கலைப் பொருட்களை வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் தீர்க்கமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய பதவிக்கு இடமாற்றம் உண்டாகும். உங்கள் மேலதிகாரி அதைப் பாராட்டுவார்.
கடகம்: உங்கள் வெளி வட்டாரத்தில் அமைதியாக இருங்கள். தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். புதிய துணையை சேர்க்கும் போது எச்சரிக்கை அவசியம். தொழில் வெற்றிகரமாக அமையும்.
சிம்மம்: வேலைகள் தடையின்றி முடிவடையும். உங்கள் பூர்வீக வீட்டைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கன்னி: திடீர் யோகம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
துலாம்: புதிய சிந்தனையால் மன உளைச்சல் நீங்கும். மூதாதையர் சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கும். வியாபாரம் சூடுபிடித்து லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் வாக்குவாதங்கள் இருக்காது.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரியிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகிவிடுவீர்கள்.
தனுசு: வெளி வட்டத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உங்கள் சகோதரர் உங்களைப் புரிந்துகொள்வார். கடையில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களைக் கேட்டு நிறைவேற்றுவீர்கள். தந்தையின் வாழ்வில் அமைதி நிலவும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் தயக்கம் ஏற்படும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பயணங்களால் தயக்கம் ஏற்படும்.
மீனம்: பழைய தங்கம் மற்றும் பொருட்களை மாற்றி புதியவற்றை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்திராத பணம் வரும். பழைய பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.