மேஷம்: நீங்கள் மேற்கொண்ட பணி நீண்ட போராட்டத்திற்குப் பின் முடிவடையும். உறவினர்களிடம் விட்டுக் கொடுப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கி வசூலிக்க சிரமப்படுவீர்கள். பயணங்கள் பரபரப்பாக இருக்கும்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். யோகா மற்றும் தியானத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
மிதுனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உங்கள் அழகும் இளமையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
கடகம்: சவால்கள் மற்றும் ஏமாற்றங்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே உறவு அதிகரிக்கும். கடனை அடைக்க போதுமான பணம் இருக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன்-மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சனை முடிவுக்கு வரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபடுவார்கள்.
துலாம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் விவாதிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்: சில அலுப்பு, மனக்கசப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது.
தனுசு: நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை நிலவும். நிலம், வீடு வாங்குவது, விற்பது நன்மை தரும். சிலர் தங்களுடைய பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவார்கள்.
மகரம்: எதையும் தாங்கும் மன வலிமையுடன் இருப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சிறுவயது நண்பர்களுடன் சேர்ந்து சில பணிகளை முடிப்பீர்கள்.
கும்பம்: எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். மனதில் புதிய யோசனைகள் வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைவீர்கள். உங்கள் வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். மனைவி மூலம் ஆதாயம் உண்டாகும்.
மீனம்: உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். வராது என்று நினைத்த பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை பிரகாசிக்கும்.