மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் வராத பணம் வரும். தொழில் வெற்றிகரமாக அமையும்.
ரிஷபம்: எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சில பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமைப்படுவீர்கள். உங்கள் மனதில் தெளிவு ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம்: சில காரியங்களை சண்டையிட்டு முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் குழப்பம் ஏற்படும். வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் தொழிலில் இடமாற்றம் ஏற்படும்.
சிம்மம்: வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
கன்னி: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். தடைகள் உடைந்து போகும். பங்குகள் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் இருக்காது.
துலாம்: முடியாது என்று நினைத்த வேலையை முடிப்பீர்கள். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம்: அற்புதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். தொழில் ரீதியாக சுற்றுலா செல்வீர்கள்.
தனுசு: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். யாரிடமும் பணம், நகை வாங்குவதில் ஈடுபட வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அதிகாரப்பூர்வமாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.
மகரம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் சார்ந்த பயணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.
கும்பம்: நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பேச்சில் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்கள் இல்ல விழாக்களில் பங்கேற்பார்கள். அலுவலகத்தில் வாக்குவாதங்கள் இருக்காது. தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
மீனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொழிலில் பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் பூர்வீக வீட்டைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் செழிக்கும். தொழில் வளமாக இருக்கும்.