தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம் கோயிலுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியில் நாகநாத சாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் இங்கு தான் உள்ளது. இங்கு நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக காட்சி அளிக்கின்றார்.
ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பாலபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வருகை புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள அரியலூர் பெரம்பலூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.