
மேஷம்: பல காரியங்களை சரியான நேரத்தில் மனதுடன் செய்து முடிப்பீர்கள். தாம்பத்தியத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் பழகுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். கோபத்தைக் குறைத்துக் கொள்வீர்கள். பங்குகள் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: உங்கள் குடும்பத்தாரிடம் விட்டுவிடுங்கள். எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டி வரும். வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து நீங்கும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த பழி நீங்கும்.

கடகம்: பழைய பிரச்சனைகள் தீரும். தாய்வழி உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் கையில் பணம் புழங்கும். அலுவலகத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய ஒருவர் உங்களைத் தேடி வருவார். தொழில், வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும்.
கன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேற்ற வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தொழில் வெற்றிகரமாக அமையும்.
துலாம்: தம்பதியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாறாக வாங்கிய பணத்தை முடிப்பீர்கள். முன்பிருந்த கோபம் நீங்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.
விருச்சிகம்: உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
தனுசு: மன வலிமையுடன் எதையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருங்கள். வியாபாரத்தில் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் மரியாதை பெறுவீர்கள்.
மகரம்: வெளியூர் பயணங்கள் பரபரப்பாக இருக்கும். சில வேலைகளை முடிக்க சிரமப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் கருத்து மோதல்கள் ஏற்படும். உங்கள் வேலையில் நிதானமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் அமைதியை கடைபிடிப்பது நன்மை தரும்.
கும்பம்: பொதுக் காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.
மீனம்: நம்பிக்கைக்குரிய நபரிடம் ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பழைய ஊழியர்களை மாற்றுவீர்கள். உத்தியோக ரீதியாக திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.