மேஷம்: பழைய நண்பர்கள் உங்களை சந்திக்க வருவார்கள். குடும்ப வருமானத்தை அதிகரிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.
ரிஷபம்: எதிர்ப்புகளை மீறி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
மிதுனம்: எதிரிகள் பணிவார்கள். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்கள் மனநிறைவை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.
கடகம்: குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். அதிகப்படியான செலவு இருக்கும். தொழில் வெற்றிகரமாக அமையும். தொழிலில் வேலையாட்களிடம் கோபப்பட வேண்டாம்.
சிம்மம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசு வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். ஒரு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு பயணம் இருக்கும். உங்களின் தொழிலில் உயர்வைக் காண்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் உங்கள் வீட்டை செம்மையாக்கும். உங்கள் வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆவணம் கிடைக்கும்.
துலாம்: இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்கள் நிறைவேறும். உங்கள் குடும்பத்தினருடன் சமாதானம் செய்யுங்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வியாபாரம் சூடுபிடிக்கும், லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் யாரிடமும் விரோதமாக நடந்து கொள்ளாதீர்கள்.
தனுசு: துணிச்சலான முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். சகோதரனுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும்.
மகரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர், யார் இல்லை என்பதை உணர்வீர்கள். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
கும்பம்: மனக் குழப்பம் விலகும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் பரபரப்பாக இருக்கும். உங்கள் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். வியாபாரம் வெற்றி பெறும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
மீனம்: தம்பதிகளுக்குள் இருந்த ஈகோ பிரச்னை, தேவையற்ற சந்தேகங்கள் விலகும். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.