மேஷம்: அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் அன்பாகப் பேசி சமாதானம் செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாகனப் பழுதுகள் தீரும்.
ரிஷபம்: எதிலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனையை அனுசரித்து நடப்பது நல்லது. வியாபாரத்தில் பொருட்கள் குவியும். ஆன்மிகம் மற்றும் தியானத்தில் நாட்டம் இருக்கும்.
மிதுனம்: கடந்த கால இனிமையான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வீடு, வாகனம் பழுது பார்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவார்கள்.
கடகம்: தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம்: திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் மேலதிகாரி நேசகரம் நீட்டிப்வர். பேச்சில் பொறுமை தேவை.
கன்னி: அலுவலகத்தில் பணிச்சுமை இருந்து கொண்டே இருக்கும். குடும்ப ஆதரவு கிடைக்கும். வாயு கோளாறால் நெஞ்சு வலி வந்து நீங்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.
துலாம்: வெளி வட்டாரத்தில் உங்களின் புகழ் உயரும். உங்கள் பெயர் பெரிய பதவிக்கு பரிந்துரைக்கப்படும். உங்கள் பெற்றோரின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல், அசதி ஏற்படும். உங்கள் குழந்தைகளிடம் அன்பாகப் பேசுங்கள். திடீர் செலவுகள் வந்து சேரும். மாலையில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
தனுசு: பழைய குடும்ப உறவுகள் உங்களைத் தேடி வரும். மனைவி மூலம் உங்கள் அந்தஸ்து உயரும். சோர்வும் களைப்பும் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பங்குச் சந்தை மற்றும் கமிஷனில் அனுகூலங்கள் இருக்கும்.
கும்பம்: பழைய பிரச்சனைகளை பேசி தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். உங்கள் கையில் பணம் புழங்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். உங்களின் பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மீனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுதுகள் தீரும்.